விக்கிசெய்தி tawikinews https://ta.wikinews.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.44.0-wmf.6 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு TimedText TimedText talk Module Module talk கிரேக்கத்தில் காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம் 0 619 55246 48128 2024-12-07T05:32:41Z Minorax 4841 55246 wikitext text/x-wiki [[படிமம்:EU-Greece.svg|right|200px|thumb|கிரேக்க நாடு]] {{date|August 23, 2009}}, ஏதென்சு, கிரேக்கம்: [[w:கிரேக்கம்|கிரேக்கத்தில்]] பரவிவரும் காட்டுத்தீ அந்நாட்டின் தலைநகரில் சேதங்களை ஏற்பபடுத்தும் என்று அஞ்சப்படும் நிலையில், அப்பகுதியில் ஏற்பட்டுள்ள மிக மோசமான சுற்றுச்சூழல் பேரவலம் இதுதான் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெரும் சீற்றத்துடன் காற்று வீசுவதால் தீ வேகமாக பரவி வரும் நிலையில், ஏதென்சு நகரின் வடக்கு மற்றும் கிழக்கு புறநகர்ப் பகுதிகளிலிருந்து பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்களை வீடுகளை துறந்து வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இத்தாலி, பிரான்ஸ் சைப்ரஸ் போன்ற நாடுகளிலிருந்து தீயணைப்பு விமானங்கள் உள்ளிட்ட சர்வதேச உதவிகளை காட்டுத் தீயை அணைப்பது தொடர்பில் கிரேக்க அரசாங்கம் பெற்றுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கத்தில் இதேபோல் காட்டுத் தீ பரவியதில் எழுபதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருந்தனர். == மூலம் == * [http://www.google.com/hostednews/ap/article/ALeqM5isr6xesG7Fybwe-fO4uTWLXgEvAwD9A8K5KG0 Thousands evacuated as fires reach Athens suburbs], Associated Press * [http://news.xinhuanet.com/english/2009-08/23/content_11931917.htm Wildfires force hundreds to flee homes near Athens], Xinhua News Agency * [http://www.bloomberg.com/apps/news?pid=20601087&sid=aff3mvvjpDfk Athens Fires Burn for Second Day; Homes Evacuated], Bloomberg L.P. [[பகுப்பு:கிரேக்கம்]] [[பகுப்பு:பேரிடர் மற்றும் விபத்து]] 7jyn1b1f29dmc2atksala05aw1hkjnx கிரேக்கப் பொதுத்தேர்தலில் சோசலிசக் கட்சி பெரு வெற்றி 0 860 55247 10101 2024-12-07T05:32:44Z Minorax 4841 55247 wikitext text/x-wiki [[File:EU-Greece.svg|thumb|right|200px]] {{date|October 5, 2009}} [[w:கிரேக்கம்|கிரேக்கத்தில்]] ஞாயிற்றுக்கிழமை நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சியான பாசொக் என்ற சோசலிஸக் கட்சி வெற்றியீட்டியது. 2004, 2007 ஆம் ஆண்டுகளில் தோல்வியடைந்த இக்கட்சி இம்முறை ஆட்சியைக் கைப்பற்றியது. பாசொக் கட்சியின் தலைவர் ஜார்ஜ் பப்பாண்ட்ரியூ அரசாங்கம் அமைப்பதற்கான காய் நகர்த்தல்களில் ஈடுபட்டுள்ளார். கட்சியின் வெற்றிச்செய்தியைக் கேள்வியுற்ற பப்பாண்ட்ரியு ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போது குறிப்பிட்டதாவது:- கிரேக்கத்தின் வரலாற்றையும், மக்களின் எதிர்காலத்தையும் மாற்றியமைக்கும் வெற்றி இது. இரண்டு ஆண்டுகளுக்குள் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகள் காணப்படும். பிழையான கொள்கைகளை மக்கள் நிராகரித்துவிட்டனர் எனக் கூறினார். {{QuoteRight|நாம் எடுத்துக்கொண்ட பாதையில் நாம் அனைவரும் இன்று ஒன்றுபட்டு நிற்கிறோம்|4=ஜோர்ஜ் பப்பாண்ட்ரியு}} கட்சியின் ஆதரவாளர்கள் வீதிகளில் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். மேளம் அடித்தவாறு ஊர்வலம் வந்தனர். பச்சைக் கொடிகளை அசைத்து மகிழ்ச்சி வெளியிட்டனர். கிரேக்கத்தின் பிரதமர் கர்மான்சிஷ் தனது பழமை பேணும் கட்சியான புதிய மக்காளாட்சிக் கட்சி தோல்வியடைந்ததையடுத்து பதவி விலகினார். இவரின் ஆட்சிக்காலத்தில் கிரேக்கம் கடும் பொருளாதார நெருக்கடிகளை எதிர் கொண்டதால் மக்கள் இவரது ஆட்சியை நிராகரித்தனர். கிரேக்கப் பாராளுமன்றத்தில் உள்ள முன்னூறு ஆசனங்களில் 160 இடங்களை பாசொக் கட்சி பெற்றுள்ளது. ஆளும் கட்சி 91 இடங்களையே பெற்றது. == மூலம் == *{{source|url=http://www.theaustralian.news.com.au/story/0,25197,26165933-26040,00.html|title= Greek PM quits as socialist leader George Papandreou claims election victory|author=AFP|pub=தி ஆஸ்திரேலியன்|date=அக்டோபர் 5, 2009}} *{{source|url=http://news.bbc.co.uk/2/hi/europe/8289674.stm|title=Greece's Socialists win snap poll|author=|pub=பிபிசி|date=அக்டோபர் 4, 2009}} * {{source |url = http://www.thinakaran.lk/2009/10/06/_art.asp?fn=w0910062 |title = கிரேக்கப் பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சி பெருவெற்றி: பிரதமர் பதவி விலகினார் |author = |pub = தினகரன் |date = அக்டோபர் 6, 2009 }} [[பகுப்பு:ஐரோப்பா]] [[பகுப்பு:அரசியல்]] [[பகுப்பு:கிரேக்கம்]] [[de:Sozialisten gewinnen Parlamentswahl in Griechenland mit 44 Prozent der Stimmen]] [[en:Greek Socialist party wins general elections]] [[es:El Movimiento Socialista Panhelénico gana las elecciones generales griegas]] [[it:Elezioni in Grecia: vincono i socialisti]] [[pl:Grecja: przedterminowe wybory do parlamentu]] [[tr:PASOK zaferini ilan etti]] f0lev3wpu17l7eli5sccw85ips1ptxi